கோவையில் இந்திய கம்யூனிஸ்டு தலைவர் எஸ்.கண்ணன் காலமானார்!

on 09 July 2012.

கோவை மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் எஸ்.கண்ணன் இன்று மாலை  காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக கோவை பீளமேடுபுதூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடல் நாளை காலை 11 மணிக்கு கோவை சரவணம்பட்டி சி.ஆர்.ஐ. மின் மயானத்தில்...


தகனம் செய்யப்படுகிறது. இதுபற்றி அறிந்ததும் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், முன்னாள் எம்.பி.சுப்பராயன், மூத்த தலைவர் ஞானைய்யா, எம்.ஆறுமுகம் எம்.எல்.ஏ, சு.பழனிச்சாமி, கே.எம்.செல்வராஜ், சிவசாமி, வி.எஸ்.சுந்தரம், திரைப்பட தயாரிப்பாளர் பூஜா பழனிச்சாமி உள்பட பலர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.


இன்றைய விளம்பரங்கள்

 

மண்டப அலங்காரம்


 

 

 

 

 

 

 

 

 

வாகனங்கள் வாடகைக்கு

 

 

 

சுவிஸ் வங்கிக்கடன்