சவுதியில் மீண்டும் இரண்டு நபரின் தலை துண்டிக்கப்பட்டு தண்டனை!

on 20 October 2011.

சவுதி அரேபியாவில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பான வழக்கில் 2 பேரின் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவுதியை சேர்ந்தவர்கள் புஹாயத் முசாபர் கடானி, புஹாயத் சய்தன் கடானி. 


இருவரும் ஒரு வீட்டுக்குள் புகுந்து கொள்ளை அடித்துள்ளனர். அங்கிருந்த இளம்பெண்ணை இருவரும் துன்புறுத்தியுள்ளனர். இந்த வழக்கில் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை இருவரது தலையும் வாளால் வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

 

 

இவர்களையும் சேர்த்து கடந்த ஜனவரி முதல் இதுவரை 64 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. உலகிலேயே மரண தண்டனை அதிகமாக நிறைவேற்றப்படும் நாடுகள் வரிசையில் தொடர்ந்து சவுதி முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

இதற்கு ஐ.நா மனித உரிமை அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மரண தண்டனை நடைமுறையை கைவிட வேண்டும் என்று சவுதியை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.



News : Source

இன்றைய விளம்பரங்கள்

 

மண்டப அலங்காரம்


 

 

 

 

 

 

 

 

 

வாகனங்கள் வாடகைக்கு

 

 

 

சுவிஸ் வங்கிக்கடன்